Ticker

6/recent/ticker-posts

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி கிடைக்குமா?

ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பாதுகாப்புச் செயலாளர் பதவியை வழங்க தேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடப்பட்டிருந்தார். அதற்காக தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரை விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர் விலக முடியாதென மறுத்துள்ளதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினராக பொன்சேகாவை நியமிக்க முடியாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சு இதுவரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் கீழ் செயற்படுவதனால் பாதுகாப்பு செயலாளர் பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் சரத் பொன்சேகா உறுதியான முடிவினை அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments