இங்கிலாந்தின் துறைமுக நகரமான சவுத்தம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி 2,224 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் கடந்த 1912, ஏப்ரல் 10-ம் தேதி முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் சொகுசு கப்பல், புறப்பட்ட 4-வது நாள் பனிப்பாறையில் மோதி, ஏப்ரல் 15-ல் நடுக்கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 1,500 பயணிகளும், கப்பல் சிப்பந்திகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டைட்டானிக் கப்பலின் இனிய அனுபவங்களை அசைப்போடும் வகையில் அது மூழ்கிய இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொருட்கள் மீட்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டும் வருகிறது.
அந்த வகையில் டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) வைக்கப்பட் டிருந்த லாக்கருக்கான சாவி நடுக் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட் டது. அந்தச் சாவி உட்பட டைட்டானிக் நினைவுகளை தாங்கிய 200-க்கும் மேற்பட்ட பொருட்களை இங்கிலாந் தின் ஹென்றி அல்டிரிட்ஜ் ஏல நிறு வனம் நேற்று ஏலம் விடப்பட்டது.
சுமார் ரூ.41 லட்சம் வரை இந்தச் சாவி ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாவி நேற்று ரூ.70 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

0 Comments