கொழும்பு – 15 மட்டக்குளி சமிட்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மட்டக்குளி சமிட்புர பகுதியில் நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு பாதாள உலகக் கோஷ்டியினரிடையே காணப்பட்ட மோதலை அடிப்படையாக கொண்டு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமிட்புர பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் விளையாட சென்று திரும்பும் போது இந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

0 Comments