(அபூ யாஸிர்)கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் நிர்வாகச் சபை தலைவரும், ஆடை வியாபாரியுமான பவ்சுல் ஹமீடுக்கு எதிராக பல ஊழல் குற்றாச்சாட்டுகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. பவ்சுல் ஹமீட் தொடராக பல அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து பொதுமக்களிடம் பணம் திரட்டியிருப்பதாகவும், கடந்த காலங்களில் திரட்டப்பட்ட இந்த பணத்திற்கு எவ்வித அபிவிருத்தி பணிகளும் இடம்பெறவில்லையென்றும் அறிய வருகிறது.
பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட இந்த பணத்திற்கு பல வருடங்களாகியும், இந்த நிதி தொடர்பாக எவ்வித வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவரை சேகரிக்கப்பட்ட பல நூறு மில்லியன் பணத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருப்பதாகவும் ஸாஹிராவின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புபி வருகின்றனர்.
2013ம் ஆண்டு மஹரகமயில் உள்ள ஸாஹிராவுக்கு சொந்தமான காணியில் ஸாஹிரரின் கிளை பாடசாலை ஒன்றைக் கட்டுவதாகக் கூறி நிதி திரட்டப்பட்டது. இந்த நிதித் திரட்டலுக்காக இராப்போசன Dinner Party நிகழ்வொன்றும் நடாத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல இலட்ச ரூபாய்கள் பவ்சுல் ஹமீடால் திரட்டப்பட்டப்பட்டிருக்கிறது. பல வருடங்களாகியும் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதாகவும் அறிய வருகிறது.
அது தவிர, 2014ம் ஆண்டு ஸாஹிராவின் விளையாட்டுக் கழக Sports Complex கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2014 டிஸம்பர் மாதம் 21 திகதி இடம்பெற்றது. ஆதற்கான பணத்தைத் திரட்டுவதற்காக ஒர் இராப்போசன வைபவம் Dinner Party ஒன்று ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.
அந்த நிகழ்விலும் பல இலட்ச ரூபாய்கள் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடத்திற்கு நிதி திரட்டுவதற்காக மற்றுமொரு இராப்போசன நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலிலும் ( Hilton Hotel ) இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்படி திரட்டப்பட்ட பல மில்லியன் பணத்திற்கு இன்று வரை என்ன நடந்தது என தெரியாமல் இருப்பதாகவும், கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாகவும் அறிய வருகிறது.
பல திட்டங்களை முன் வைத்து நிதியை திரட்டி விட்டு, பணத்தை பதுக்கி வைத்து வேலைத்திட்டங்களை முடக்கி வைக்கும் பவ்சுல் ஹமீடின் செயற்றிட்டம் ஸாஹிராவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், இப்போது அரசாங்க பாடசாலைகள் பக்கமும் நகர்ந்திருக்கிறது.
கடந்த 2016 மே மாதம், அரசாங்க பாடசாலையான கொழும்பு தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகக் கூறி இதே பாணியில் மற்றுமொருமுறை பணம் திரட்டல் ஒன்றை பவ்சுல் ஹமீட் ஆரம்பித்தார். இந்த நிதி திரட்டலுக்காக மாளிகாவத்தையில் 'எப்பல் வத்த' என்ற பகுதியில் இருக்கும் வறிய மக்களின் சேரிப்புர வாழ்க்கையை சித்தரிக்கும் ஆவணப் படம் ஒன்றை தயாரித்துக் காட்டப்பட்டது. இந்தப் படத்தைக் காட்டி தனவந்தர்களிடமிருந்து பல இலட்ச ரூபாய்கள் திரட்டப்பட்டது. இப்படி திரட்டப்பட்ட பணம் பல மில்லியன்களை தாண்டியுள்ள நிலையில், இந்த பணத்திற்கும் இதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கிறது.
இதுவரை தாருஸ்ஸலாம் வித்தியாலய வங்கிக்கணக்கில் வைக்கப்படாத திரட்டப்பட்ட குறித்த பணம் தற்போது தனியாரின் கைகளில் சுழலுவதாகவும், சிலரின் தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
இந்த நிதித் திரட்டலுக்கான ஏற்பாட்டை செரண்டிப் பாடசாலை அபிவிருத்தி நிறுவனம் என்ற அமைப்பே ஒழுங்கு செய்திருந்தது.
சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள பவ்சுல் ஹமீடின் இந்த நிதி திரட்டல் விவகாரம் தொடர்பாகவும், பவ்சுல் ஹமீடின் தன்னிச்சையான செயற்பாடு தொடர்பாகவும் செரண்டிப் நிறுவன அங்கத்தவர்களுக்கும் பவ்சுல் ஹமீடுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் நேர்மையாக சிந்திக்கும் பல அங்கத்தவர்கள் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் அறிய வருகிறது.
0 Comments