(எம்.இஸட்.ஷாஜஹான்)
எமது நாட்டு மக்களுக்கு கடந்த கால ஆட்சி வெறுத்திருந்தது. நாட்டை சூறையாடிக் கொண்டு, குடும்ப ஆட்சியை நடத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மக்கள் வெறுத்தமையே அதற்கு காரணமாகும். அன்றை ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பேருவளையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார்.
எமது நாட்டு மக்களுக்கு கடந்த கால ஆட்சி வெறுத்திருந்தது. நாட்டை சூறையாடிக் கொண்டு, குடும்ப ஆட்சியை நடத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மக்கள் வெறுத்தமையே அதற்கு காரணமாகும். அன்றை ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பேருவளையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார்.
நீர்கொழும்பு ருக்மணி தேவி மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான பிரதான கட்சிக் காரியாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர் லலித் டென்னிஸ், கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் அஜித் பஸ்நாயக்க, களனி தேர்தல் தொகுதி அமைப்பாளர் திலக் வராகொட உட்பட பெரும் எண்ணிக்கையான கட்சி ஆதரவாளர்கள் கலந் கொண்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் கதைப் பதற்கு பயந்தனர். தப்பித்தவறி எவராவது கதைத்தால் அடுத்த நாள் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள். எனது தொலைபேசி அழைப்புக்கள் இரகசியமாக பதிவு செய்யப்பட்டன.
அன்றை ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டது. ராஜபக்ஷ சகல தமிழர்களையும் புலிகளாகப் பார்த்தார். பேருவளையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இது தொடர்பாக நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எல்லோரும் அதனை வாசிக்க வேண்டும். நடந்த உண்மை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஷவுக்கு இருந்தது மக்களின் பலம் அல்ல. பொலிஸ் உட்பட படையினரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பலம். முற்றையது மோசடியாக சம்பாதித்த பண பலமாகும். ஆயினும் அவரை தோற்கடி;ப்பதற்கு நாங்கள் மக்கள் பலத்தை ஒனறு திரட்டினோம். நாட்டை காப்பாற்றுவத்ற்காகவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்று சேர்ந்தோம். முஹிந்த ராஜபக்ஷ அன்று வெற்றி பெற்றிருந்தால் என்னைத்தான் முதலில் கொலை செய்திருப்பார்.
அன்று ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. ஊடக நிறுவனங்கள் அச்சுறுத்தப்பட்டன. ஆட்சியாளர்கள் தமக்கு தேவையான விதத்தில் ஊடக நிறுவனங்களை செயற்படுத்தினார்கள். இதன் காரணமாக கிராமப் புற மக்களுக்கு ஆட்சியில் நடக்கும் உண்மைகள் தெரிய வரவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களில் உயர்தர வகுப்பில் சித்தியடைந்தவர்கள் 50 சத வீதம் கூட கிடையாது. பட்டம் பெற்றவர்கள் 10 சத வீதம் கூட இல்லை. சிலர் தம்மை சட்டத்தரணிகளாக கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் சட்டம் படித்து பட்டம் பெற்றவர்கள் அல்லர். டிப்ளோமா பெற்றவர்களாவர்.
இன்று சுதந்தரம், மனித உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் மக்களுக்கு ஜனநாயக்தையும் சுதந்திரத்தையும் வழங்கி வழங்கியுள்ளோம். ஊடக சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

0 Comments