இனமொன்று எந்த மொழியைப் பேசுகிறதோ அதேமொழியில் அவர்களது கல்வியைத் தொடரவும், அரச கருமங்களை ஆற்றவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக இருப்பதுடன், சர்வதேச நியதியாகவும் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி தர்மராஜ கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “உலகிலுள்ள பல நாடுகளில் இடம்பெறுவது போன்று முரண்பாடுகளால் எமது நாட்டின் வரலாற்றிலும் முரண்பாடுகளால் பேரவலம் ஏற்பட்டது. மொழியானது மனிதாபிமானத்தின் குரலாக இருக்கவேண்டுமே தவிர மொழி ரீதியில் வகுப்புவாதமோ, வளப்பகிர்வில் அநீதியோ இடம்பெறக் கூடாது.
எந்தவொரு மொழியையும் பேசுபவர் தனது மொழியிலேயே நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த உரிமையை மேலும் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.” என்றுள்ளது.

0 Comments