Ticker

6/recent/ticker-posts

பிரபல சிங்கள பாடகர் அமரதேவ காலமானார்

பிரபல சிங்கள பாடகர் அமரதேவ காலமானதாக ஜயவர்தனபுர மருத்துவனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மரணிக்கும் போது இவருக்கு வயது 88.

1927 டிஸம்பர் மாதம் 5ம் திகதி மொரட்டுவையில் பிறந்த இவரின் பெயர் அல்பர்ட் பெரேராவாகும். சிங்கள இசைக்கு புத்துயிர் ஊட்டிய பெருமை அமரதேவ அவர்களுக்கு உரியது. மாலைத்தீவின் தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவரும்  அமரதேவ என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன், இந்தியா,பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல விருதுகளைப் பெற்ற அமரதேவ இலங்கையில் தேசமான்ய, கலாகீர்த்தி போன்ற கௌரவப் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments