Ticker

6/recent/ticker-posts

முதலாம் இடத்தை பெற்ற மாணவனின் வீட்டுக்கு சென்று பாராட்டி பரிசு வழங்கிய றிஸ்வி ஜவஹர்ஷா.

-ரிம்சி ஜலீல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேற்றி சித்தியடைந்த குருநாகல்
மாவட்டம் தொடங்கஸ்லந்த தொகுதிக்குட்பட்ட தல்கஸ்பிடிய பிரதேசத்தில்
அமைந்துள்ள அல்-அஸ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 183 புள்ளிகளை
பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட செல்வன் அர்கம் நதீரை பாராட்டி பரிசு வழங்கி வைப்பதற்காக வடமேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ.ல.மு.கா குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளர் றிஸ்வி ஜவஹர்ஷா நேற்று (01) ம் திகதி அந்த மாணவரின் வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்.

இந்த நிகழ்வின் போது பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை நாம்
எந்தளவிற்கு பாராட்டுகின்றோமோ அதே போல அவர்களது எதிர்காலக் கல்விக்கும்
நாம் உற்சாகமளிக்கவேண்டும் அப்போதுதான் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு
சிறந்த புத்திஜீவியாக முடியும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments