கொழும்பு மாளிகாவத்தை தேசிய வீடமைப்பு திட்டத்திலுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் முன் தேங்கியிருக்கும் மழை நீரையே இங்கு காண்கின்றீர்கள்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் நிரம்பியுள்ள நீரே இவ்வாறு தேங்கி பல சுகாதார கேடுகளை விளைவிக்க தயார் நிலையில் இருக்கிறது. இதனால் நுளம்பு பெருகும் ஆபத்தும் உருவாகியிருக்கிறது.
நாடு முழுவதும் டெங்கு உயிர்கொல்லி நுளம்பு பரவி உயிர்களை காவு கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக குறித்த அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும் பாராமுகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
0 Comments