
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்தது போல் மிகவும் சுதந்திரமாக இனவாதிகள் இந்த தீய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய மைத்திரி, ரணில் அரசு இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கைது செய்யாமல் ராஜபக்ஷ பாணியில் காலத்தை நகர்த்தி வருகிறது.
இன்று அதிகாலை மகரகம நகரிலுள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கார்பட் விற்பனை நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த கடை உரிமையாளர் அக்குறனை பகுதியை சேர்ந்தவராவார். பொலிசார் வழமையான தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியவருகிறது.
0 Comments