Ticker

6/recent/ticker-posts

மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

நவீன காலத்தில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மனித இனமே இதனால் அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறித்து மருத்துவக் குழு ஒன்று விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 1973-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சுமார் 200 ஆராய்ச்சிகளை விரிவாக மேற்கொண்டதில் தற்போது அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதாவது, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கு அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆண்களின் விந்தணு எண்ணிக்கை 59.3 சதவிகித அளவிற்கு குறைந்துள்ளது.
இதுக் குறித்து ஆராய்ச்சியாளரான Dr Hagai Levine கூறுகையில், ‘ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவது எதிர்காலத்தில் மனித இனத்தை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.
இனப்பெருக்கம் நின்றுவிட்டால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்களின் விந்தணு குறைவதற்கு உறுதியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
ஆனால், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்பது, உடல் பருமன் அதிகரிப்பது, புகைப்பிடிப்பது, மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, நீண்ட நேரம் தூங்காமல் தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆண்களின் விந்தணு குறைய வாய்ப்புள்ளது.
எனவே, இதனை இப்போதே தவிர்க்க அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என Dr Hagai Levine தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments