முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனின் கீழ் இருந்த, வடமாகாண மகளீர் விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவிடப்பட்ட 320 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார்.
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடி விசாரணைகளை ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆரம்பித்துள்ளார்.
மகளீர் விவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதியினை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார். (வருடல்)

0 Comments