Ticker

6/recent/ticker-posts

வடக்கு, கிழக்கில் உணா்வுபூா்வமாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!


இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 
நேற்றயை தினம் யாழ், மாவட்டத்தில், யாழ்-பல்கலைக் கழகம், கோப்பாய் பழைய மாவீரர் துயிலுமில்லம் முன்பாக, யாழ்-நல்லூர், வடமராட்சி தீருவில் துயிலுமில்லம், தீவகம் சாட்சி துயிலுமில்லம் ஆகிய இடங்களில் பெருமளவான மக்கள் ஒன்றுகூடி மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
இதே வேளை, கிளினொச்சி மாவட்டத்தில் விசுவமடு தேராவில் துயிலுமில்லம், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இடங்களிலும் பல்லாயிரகணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம், முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் ஆகிய இடங்களிலும் சீரற்ற காலனிலைக்கு மத்தியிலும் மக்கள் பெருந்திரளாக திரண்டு மாவீரர்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடி முன்மாதிரி மாவீரர் துயிலுமில்லத்திலும் பெருமளவான மக்கள் ஒன்று கூடி தம் உறவுகளை நினைந்துருகி மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.  
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பிரத்தியேக இடத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். (நன்றி வருடல்)

Post a Comment

0 Comments