Ticker

6/recent/ticker-posts

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது இன்சைட் (INSIGHT) விண்கலம்! புகைப்படமும் அனுப்பியுள்ளது

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. 

செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை நாசா அமைப்பு 1976-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. நாசாவின் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி தொடர்பான 9வது விண்கலம் தான் இன்சைட், இது செவ்வாய் கிரகத்தில் கால் பதித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை விரிவாக ஆய்வு செய்யும் நோக்கத்தில், இன்சைட் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று கால்களைக் கொண்டது இந்த விண்கலம். மெல்ல மெல்ல தரை இறங்கியது. இறங்கியதுமே, படம் எடுத்து அதை நாசாவுக்கு அனுப்பி உள்ளது. அதை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம் 548 மில்லியன் கிலோ மீட்டர் அளவுக்கு பயணித்து செவ்வாய் கிரகத்தில் கால் பதித்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி இருந்தது. இனசைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததும் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Post a Comment

0 Comments