Ticker

6/recent/ticker-posts

பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜே குணரத்ன கைது!


2008ம் ஆண்டு  பாடசாலை மாணவா்கள் உட்பட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று காணாமல் போகச் செய்த குற்றம் தொடா்பாக இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜரான பாதுகாப்பு படைகளின் பிரதானி ரவீந்திர விஜே குணரத்ன கைது செய்யப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி வரை சிறையில் அடைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

11 பேரை கடத்தி காணாமல் போகச் செய்தது  தொடா்பான வழக்கு இன்று (28) கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இந்த குற்றத்திற்கு பிரதான சந்தேக நபரான பிரசாத் ஹெட்டியாரச்சி என்ற நேவி சம்பத் என்பவரை  அடைக்கலம் கொடுத்து அவரை சட்டத்தின் பிடியில் சிக்காமல் பாதுகாத்தது தொாடர்பாக ரவீந்திர விஜே குணரத்ன மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இன்று தனது சீருடையில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி ரவீந்திர விஜே குணரத்ன,  2.30 மணியளவில் நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததையடுத்து.  தனது சொந்த வாகனத்தில் சென்று  சாதாரண உடையில் மீண்டும்  நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

இந்த வழக்கின் எதிர்தரப்பு சாட்சியாக இருந்த கடற்படை கமாண்டர்  லக்சிரி கலகமகே ஒரு சில தினங்களுக்கு முன்னர் ரவீந்திர விஜே குணரத்னவின் ஆட்களினால் தாக்கப்பட்ட விவகாரமும் இன்று நீதவான் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய தினம் கோட்டை நீதிமன்றத்திற்கு சென்ற ஊடகவியலாளா்கள் ஒருசிலா் கடற்படை அதிகாரி ஒருவரால்  தாக்கப்பட்டதுடன் குறித்த கடற்படை அதிகாரியை நீதிமன்றத்தில் கடமையிலிருந்த பொலிஸார் கைது செய்துள்ளனா்.

Post a Comment

0 Comments