தொடர்ந்து வரும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க அரச தரப்பு தீர்மானித்துள்ளதாக வீட்டுவசதி மற்றும் சமூக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு ஆளும் தரப்பினர் இன்றி பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது, ஆளுந்தரப்பு வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர் நேற்று பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றபோது, ஆளுந்தரப்பு அதனை முற்றாக பகிஷ்கரித்திருந்தது.
இந்நிலையில், நாளை காலை 10.30ற்கு கூடவுள்ள பாராளுமன்ற அமர்விலும் பங்கேற்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லையென இன்று ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments