Ticker

6/recent/ticker-posts

ஊடகவியலாளா்களைத் தாக்கிய பொலிஸாரை காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள்!

கொழும்பு கோட்டை நீதிமன்றின் தடுப்புக்காவல் உத்தரவிற்குப் பின்னர்  பாதுகாப்பு படைகளின் பிரதான அதிபாரி ரவீந்திர விஜேகுணரத்னவை புகைப்படமெடுக்க முயற்சித்த  த மோர்னிங் மற்றும் அருண பத்திரிகை நிறுவன புகைப்பட ஊடகவியலாளா்களை தாக்குதலுக்கு உள்ளாகினர்.  இதன்போது இரண்டு கடற்படை அதிகாரிகளை நீதிமன்ற பொலிஸார் கைது செய்தனா். தற்போது கைது செய்யப்பட்ட இந்த  கடற்படை அதிகாரிகளை  காப்பாற்றும் முயற்சியில் பொலிஸ் உயரதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக அறிய வருகிறது.

மேற்படி பத்திரிகை நிறுவனத்தின் புகைப்பட நிருபா்களை ரவீந்திர விஜேகுணரத்னவை படமெடுப்பதில் இருந்து தவிா்ப்பதற்காகவே கடற்படை அதிகாரிகள் தாக்கியுள்ளனா்.

நீதிமன்ற பொலிஸாரின் நடவடிக்கையால் இந்த இரண்டு கடற்படை அதிகாரிகளும் உடனே கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகள் கடற்படை புலனாய்வு பிரிவில் கடமையாற்றுபவா்கள் என்றும் அறியவருகிறது.


Post a Comment

0 Comments