Ticker

6/recent/ticker-posts

சி.வி. விக்னேஷ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டது!

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த முதலமைச்சருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் நிறைவடைந்துள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
இருப்பினும் அவருக்கு பாதுகாப்புக்கள் தேவைப்படின் பாதுகாப்பு அமைச்சினூடாக உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும், அவ்வாறு அமைச்சின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கத் தயார் எனவும் சி.வி.விக்னே‌ஷ்வரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments