Ticker

6/recent/ticker-posts

நீதிக்கான போராட்டம் 17ம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.


கொழும்பு காலி முகத்திடலில் 13ம் திகதி  ஐக்கிய தேசிய முன்னணி, சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் 17ம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஒரு இலட்சம் பேரைத்  திரட்டி ஜனாதிபதி சிறிசேனவின் சர்வாதிகார பிடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான திகதி 17ம் திகதி எனவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு காலிமுகத்திடலில்  இது நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

Post a Comment

0 Comments