பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்கு இலஞ்சமாக அதிகளவு பணம் கேட்டது தொடா்பாக ஜனாதிபதி சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த கருத்து பாரதூரமானது என்றும் இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
'அபி புரவெசியோ' අපි පුරවැසියෝ அமைப்பு நேற்று (8) நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த இலஞ்சம் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதியான சிறிசேனவே கருத்து வெளியிட்டிருப்பது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் பின்னணிக்கு யார் காரணம் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்த சூழ்ச்சிக்கு காரணமான மஹிந்த ஓர் அரசியல் அனாதையாக மாறி உள்ளார் என்றும் அவா் கூறினார்.
0 Comments