Ticker

6/recent/ticker-posts

வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாகும் மைத்திரியினுடனான பேச்சுவார்த்தை

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும்  இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டாம் திகதி மீண்டும் எதிா்த்தரப்புகளோடு சந்தித்து பேசவுள்ளதாக அறியவந்துள்ளது.

வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாக மைத்திரியினுடனான பேச்சுவார்த்தை மாறிவருகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி சிறிசேன பலமுறை எதிா்த்தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும் இந்த பேச்சுவார்த்தைகள் வெறுமனே கூடிக் கலைகின்ற ஒன்றாகவே இருந்திருக்கிறது. நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை கூட எவ்வித இணக்கமுமின்றி முடிவடைந்தள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றை ஜேவிபியினரும், சபாநாயகரும் நிராகரித்திருந்தனா். 
அந்த வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்தித்து பேசியிருந்தார்.

பாராளுமன்றத்தில் பலமுறை பெரும்பான்மையை ஐதேக நிரூபித்திருந்த போதிலும்,  மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மீளவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை மீண்டும் கொண்டுவந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதிவியை வழங்குவதற்கு ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். 

இந்த சந்திப்பு நிறைவு பெற்ற பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியினரை ஜனாதிபதி சந்தித்து பேசியிருந்தார். எனினும், இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments