Ticker

6/recent/ticker-posts

கோத்தாபயவே எமது அடுத்த ஜனாதிபதி : ரோஹித அபேகுணவர்தன

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை, அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவதே தமது இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவினால் மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பதுரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments