Ticker

6/recent/ticker-posts

சிறிசேனவின் கையால் விருது பெறுவதை மறுத்துள்ள நடிகர் டப்லியூ. ஜயசிரி.


பிரபல சிங்கள நடிகர் டப்லியூ ஜயசிரி தனக்கு கிடைக்கவுள்ள கலாபூஷண விருதை நிராகரித்துள்ளார். இந்த விருது விழாவில் ஜனாதிபதி சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு விருதுகளை வழங்கவிருக்கிறார்.

அக்டோபர் 26 ம் திகதி இந்நாட்டில் இடம்பெற்ற  அரசியல் சதித்திட்டத்தை எதிர்த்து 2018 கலாபூஷண  விருது விழாவில் கலந்து கொள்வதை தான் நிராகரித்திருப்பதாக  பிரபல நடிகர் டப்லியூ . ஜயசிரி  தொிவித்துள்ளார்..

ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும்  விரோதமாக  பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை கண்டிப்பதாகவும்   ஜெயசிரி அறிவித்திருக்கிறார்.

34வது கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெறவிருக்கிறது.


Post a Comment

0 Comments