நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெறும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி வேறு ஒரு கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுள்ள காரணத்தினால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமராக பதவியேற்ற பின்னர், அவரும் அவரது அணியில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டனர்.
0 Comments