நாட்டில் தொடரும் வரும் அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும், ஒரு அறைக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்று ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. சிங்கள சேவையின் பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பி.பி.சி. சிங்கள சேவையின் பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மைத்திரிபால சிறிசேனவையும் ரணில் விக்ரமசிங்கவையும் ஒரே அறைக்கும் அடைத்துவிட வேண்டும். ஒன்றில் அவர்கள் ஒருவரை மற்றவர் கொலை செய்யட்டும். அல்லது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்ளட்டும். எவ்வாறாயினும் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது.
தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, முதலில் ஜனாதிபதி யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு சரியான அரசாங்கம் இல்லாமல், நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது.
முதல் நடவடிக்கையாக, புதிய அரசாங்கத்தை கொண்டு வந்து, அரசியலமைப்பு சதியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். புதிய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதுடன், அதற்குப் பின்னர் பொதுத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுள்ளார்.
0 Comments