Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது : சித்தார்த்தன்

தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியை  ஆதரிப்பதற்கு காரணமும் அதுதான் என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார். 
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பாக நடுநிலை வகிக்குமாறு சிலர் கூறுகின்றபோதிலும் அவ்வாறு நடுநிலை வகிப்பதானது மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு சமமாகவே பார்க்கப்படுகின்றது என்றும் கூறிய அவர், தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினை தெரிவித்தோம் என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments