Ticker

6/recent/ticker-posts

பஞ்சத்தில் தவிக்கும் யெமன் மக்கள்!

கடந்த சனிகிழமை அன்று ஜெனிவாவில் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி 15.9 கோடி யெமன் மக்கள், அதாவது நாட்டின் 53% மக்கள் "கடுமையான உணவு காப்பறுநிலையை" எதிர்கொள்கின்றனர். மேலும், யெமனில் நடைபெறும் போர் காரணமாக நாட்டின் வறட்சியையும் அதைத் தொடர்ந்து பொருளாதார சரிவையும் அந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
ஜெனிவாவில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு யெமனி அதிகாரிகளாலும் சர்வதேச நிபுணர்களாலும் கடந்த அக்டோபர் மாதத்தில் கணக்கெடுக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மக்கள் மிகவும் ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என இவ்வறிக்கை எச்சரிக்கிறது. பட்டினி நெருக்கடிக்கு முக்கிய காரணம் போர் என அடையாளப்படுத்தினாலும், உணவுப் பொருட்களின் அதிகப்படியான விலைகள், பணப்புழக்க நெருக்கடிகள், வாழ்வாதாரங்களின் பாதிப்புகள் மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத வேலையின்மை ஆகியவைகளும் தான் மேன்மேலும் நிலைமை மோசமடைய செய்துள்ளன.
இந்த உணவு இடைவெளியைக் குறைப்பதற்கு தன்னார்வலர்களின் உதவிகள் போதுமானதாக இல்லை என்றும், மோசமான சூழ்நிலையில் வாழும் மில்லியன் கணக்கான உயிர்களையும் அவற்றின் வாழ்வாதாரங்களையும் அடுத்த ஒரு கடுமையான பஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான உடனடி தீர்வுகள் அத்தியாவசியமானது என்றும் இவ்வறிக்கை சுட்டுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் படி,
"இவ்வறிக்கை யெமன் முழுவதும் பசியில் தீவிரமாக வாடும் பல பகுதிகளை அம்பலப்படுத்தியது, சண்டைகள் நடைபெறும் பகுதிகளைத் தீவிரமாக கண்காணித்துள்ளது.குறிப்பாக பாதிக்கப்பட்ட 03 மில்லியன் இடம்பெயர்ந்த மக்களும், அவர்களின் உறவினர்கள், நிலமற்ற கூலி தொழிலாளர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளான பிற ஒடுக்கப்பட்டக் குழுக்களையும் கணக்கிட்டுள்ளது."
- அபூ ஷாமில் (11/12/18)

Post a Comment

0 Comments