Ticker

6/recent/ticker-posts

எம்மை விமர்சித்துக் கூட்டம் நடாத்தியவர்கள் எமது சகோதரர்களே! அவர்களை நாம் மதிப்போம்! உஸ்தாத் மன்சூர்

அண்மையில் அக்குறணை உலமா சபை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் தொடர்பாக உஸ்தாத் மன்சூர் விடுத்துள்ள வேண்டுகோள்.
மதிப்புக்குறிய சகோதரர்களே,
நாம் ஓர் உயர்ந்த சிந்தனைக்காக உழைப்பவர்கள், பாடுபடுபவர்கள். எனவே, வார்த்தைகளிலும், நடத்தைகளிலும் எம்மிடம் ஆழ்ந்த கண்ணியம் காணப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில் அஸ்னாப் பள்ளியில் நடந்த கூட்டத்தை எதிராளிகளின் கூட்டமாக நாம் பார்க்கத் தேவையில்லை.
அது ஒரு விமர்சனம். அதனை நாம் சமூகப் பிளவுகள் ஏற்படாமல், பாரிய மனக் கசப்புகள் ஏற்படாமல், எந்தவித வன்முறைகளும் இல்லாமல் எப்படி எதிர்கொள்வது என்பதைத் திட்டமிடுவோம்.
எமக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் உரிமை எமக்குள்ளது. அது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டமையால் பகிரங்கமாகவே எம் பதிலை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் உட்படுகிறோம்.
ஆனால், நாம் அதனை மிகவும் கண்ணியத்தோடும் மோசமான வார்த்தைகள் கடுமையான பிரயோகங்களைத் தவிர்த்தும் வெளியிடுவோம். அறிவுபூர்வமான வாதத்தையே முன்வைப்போம். எமது தவறுகளிருந்தால் அதனை ஏற்றுக் கொள்வோம்.
சகோதரர்களே, எம்மை விமர்சித்துக் கூட்டம் நடாத்தியவர்கள் எமது சகோதரர்களே. அவர்களை நாம் மதிப்போம். ஏற்றுக் கொள்வோம்.
நாம் சிறுபான்மை சமூகம். நாம் பிளவுபடுவதும், கடுமையாக முரண்படுவதும் எம்மையே பலவீனப்படுத்தும்.
உங்கள் எல்லோர் மீதும் எனக்கு அதிகாரம் கிடையாது. ஆயினும் உங்களிடம் நான் இதனை வினயமாகவும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹ் எம்மை நேர்வழி நடாத்தி எம்மைப் பலப்படுத்துவானாக.
*Sheikh Usthaz Mansoor*
*2018-12-11*

Post a Comment

0 Comments