Ticker

6/recent/ticker-posts

இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் - ஜி.எல்.பீரிஸ்

மேன் முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
நாட்டின் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்றும் அரச பொறிமுறை அழிவுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருப்பதகாவும் அவர்கள் கூறி வருகிறார்கள். இவ்வாறான பிரசாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை. பிரதமர் பதவியும் அமைச்சரவையும் அவ்வாறே காணப்படுகின்றன. அவற்றின் அதிகாரங்களை மாத்திரமே தடை உத்தரவின் மூலம் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்காக மக்களை சந்திக்க பொதுஜன பெரமுன தயார் என்று அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். 

மக்களிடமிருந்து மறைந்திருக்க ஐக்கிய தேசிய கட்சி தலைவர் உட்பட பிரதிநிதிகள் முயன்று வருகிறார்கள். கட்சிக்குள் ஜனநாயகத்தை வழங்காத ரணில் விக்ரமசிங்க நாட்டில் எவ்வாறு ஜனநாயகத்தை பாதுகாப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 


Post a Comment

0 Comments