Ticker

6/recent/ticker-posts

சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவிற்கு பந்துவீசத் தடை

இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இதனையடுத்து, உடன் அமுலுக்குவரும் வகையில் சர்வதேச போட்டிகளில் பந்துவீச அகில தனஞ்சயவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கையொன்றினூடாக இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், எத்தனை நாட்களுக்கு குறித்த தடை அமுலில் இருக்கும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 14 நாட்களுக்குள் குறித்த தடைக்கு எதிராக அகில தனஞ்சய மேன்முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments