கடந்த ஒக்டோபர் மாதம் 28ம் திகதி கொழும்பு தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்கு வந்த பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக குழப்பம் விளைவித்ததன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எதிர்வரும் 18ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 Comments