Ticker

6/recent/ticker-posts

ஈரான் சிறைக்கைதி உண்ணாவிரதம்

நசானின் சகாறி றச்லிஃபே (NAZANIN ZAGHARI-RATCLIFFE)  ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள, பிரித்தானியா மற்றும் ஈரானில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பெண் கைதி உண்ணாவிரதத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

இவர் மீது ஈரானுக்கு எதிராக உளவுபார்த்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.  கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நசானின் சகாறி றச்லிஃபே  விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
நசானின் சகாறியின் மார்பில் கட்டி உருவாகியுள்ளதுடன், பல சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக அவரது கணவன் குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் மருத்துவர் ஒருவரை சந்திப்பதற்கான வசதியை தெஹ்ரான் சிறை நிர்வாகம் செய்துகொடுக்கவில்லையென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 
தனது இரண்டு வயது மகளான கெப்ரியெலாவுடம் ஈரானிலுள்ள தனது குடும்பத்தினைச் சந்திக்க விமானநிலையத்தை அடைந்தவேளை ஈரான் சிறப்புப் பொலிஸ் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நசானின் சகாறிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தெஹ்ரான் சிறையில் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
எனினும், நசானின் சகாறி மீதான குற்றச்சாட்டை அவர் உட்பட அவரது குடும்பத்தார் மறுத்துள்ளனர். அத்தோடு, நசானின் சகாறி மனநலம் குன்றி தலைமயிர் உதிர்ந்து வருவதாகவும் அவரது கணவர் தனது மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரான் கடந்த காலங்களில் இவ்வாறு பலரை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments