அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை, பணிப்பாளர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை அண்மையில் ஜனாதிபதி சிறிசேன சுற்றறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டிருந்தார்.
இந்த சுற்றறிக்கையின் படி அனைத்து அமைச்சர்களும் செயற்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்களுக்கும் பணிப்புரை விடுத்தள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு தலைவா்களை, பணிப்பாளர்களை நியமிப்பதற்கு முன்னர் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதற்காக ஜனாதிபதி தனது செயலாளரின் தலைமையின் கீழ் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறார்.
ஜனாதிபதி சிறிசேனவின் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கசல அமைச்சர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Comments