இந்திய பாராதீய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ எனக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். உங்களின் வாழ்த்துகளும், கடவுளின் கருணையும் இருப்பதால் விரைவில் குணமடைந்து வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “ பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நெஞ்சு வலி, மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்சினைகளுக்காக இங்கு வந்தார். அதன்பின் இரவு 9 மணி அளவில் வார்டில் அமித் ஷா சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவர் குழுவின் கண்காணிப்பில், அமித் ஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments