மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு மேல்மாகாண சபையின் அரசாங்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாக அறிய வருகிறது.
இதன்படி எதிர்வரும் 22ம் திகதி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஊழல் மோசடிகளுக்கு குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பதை மேல்மாகாண சபை அங்கத்தவா்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அஸாத்சாலிக்கு எதிரான நம்பிக்கயைில்லா பிரேரணையை எதிர்வரும் மேல்மாகாண சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக ஐதேக அங்கத்தவர் ஒருவர் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments