Ticker

6/recent/ticker-posts

SLTJ யை CTJ காட்டிக்கொடுத்ததா..?

நெல்லிகல தம்மரத்ன தேரருடன் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சினேக பூர்வ சந்திப்பு ஒன்று நேற்று 13/01/2019 நெல்லிகல விகாரையில் இடம் பெற்றது. அதில் மாவனல்ல சிலை உடைப்பு விவகாரம் குறித்து பேசப்பட்டது.

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக அவருக்கு இருந்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டதுடன், சிலை உடைப்பு விவகாரத்திற்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), ஜம்மிய்யத்துல் உலமா (ACJU) மற்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) போன்ற எந்தவொரு அமைப்பிற்கும் தொடர்பில்லை என்பதுடன் இவர்களில் யாரும் இதுபோன்ற செயலை ஆதரிக்கின்றவர்களும் இல்லை என்பது தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

அத்துடன் தவறு செய்கின்றவர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்கள். அவர்களின் தவறை வைத்து அவர் சார்ந்திருக்கும் மதத்தை பின்பற்றும் சமூகத்தை குறை கூறுவது எப்படி நியாயமற்றதோ அதை ஏற்றுக்கொள்ள முடியாதோ அதுபோல் இஸ்லாம் குறித்த பூரண தெளிவில்லாமல் சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு இஸ்லாமிய அமைப்புகளோ ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமோ ஒரு பொழுதும் பொறுப்பாகாது என்பதும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.

CTJ இனர் சிலை உடைப்பில் சம்பந்தப்பட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தேரரிடம் காட்டிக் கொடுத்தார்கள் என்று பரப்பப்பட்ட செய்தி பொய்யானது, SLTJ அப்படியான காரியத்தை ஒரு பொழுதும் செய்யவில்லை என்று குறித்த தேரரே உத்தரவாதத்துடன் உறுதிப்படுத்தினார். அத்துடன் "SLTJ அமைப்பை நான் இன்றுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். அப்படி இருக்கும்பொழுது SLTJ என்னிடம் காட்டித்தந்ததாக எப்படி கூறமுடியும் ?" அவ்வாறு கூறுவது போலியானது என்றும் தேரர் மிகத்தெளிவாக குறிப்பிட்டார்.

சுய நலத்திற்காக ஜமாஅத்தை உடைத்து புதிய ஜமாஅத் ஆரம்பித்தவர்கள் தங்கள் சுய நலனுக்காக சமூகத்தையும் அடகு வைப்பார்கள் என்பது குறித்த சம்பவம் வழியாக நிரூபணம் ஆனது அல்ஹம்துலில்லாஹ்!

மக்கள் இவர்களின் செயற்பாட்டின் காரணமாகவே இவர்கள் யார் என்பதை கண்டு கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ்!

தேரருடனான சந்திப்பு வீடியோ விரைவில் வெளியிடப்படும்.

SLTJ

Post a Comment

0 Comments