சிறைச்சாலைக் காவலர்கள், ஜெயிலர்கள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அதிகாரிகள் என, 1,275 பேரை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஆண் சிறைச்சாலைக் காவலர்கள் 1068 பேரையும், பெண் சிறைச்சாலைக் காவலர்கள் 110 பேரையும், இரண்டாம் நிலை ஆண் ஜெயிலர்கள் 69 பேரையும், இரண்டாம் நிலை பெண் ஜெயிலர்கள் 10 பேரையும், இரண்டாம் நிலை ஆண் புனர் வாழ்வளிப்பு அதிகாரிகள் 15 பேரையும், இரண்டாம் நிலை பெண் புனர் வாழ்வளிப்பு அதிகாரிகள் 3 பேரையும் சேவையில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்களும் நிபந்தனைகளும், 29 ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்கள், ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments