Ticker

6/recent/ticker-posts

அலரி மாளிகையில் STF அதிகாரி தற்கொலை!

அலரி மாளிகையில் கடமையாற்றி வந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிய வருகிறது. 

பிரதம மந்திரியின் எத்தியோகபூர்வ இல்லமான  அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments