Ticker

6/recent/ticker-posts

ஹக்கீம், ரிஷாத், கபீரின் இடத்துக்கு பதில் அமைச்சர்கள் இன்று நியமனம்



நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (10) நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சுப் பதவியை ரவூப் ஹக்கீம் முன்னர் வகித்திருந்தார்.
இதேநேரம் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் விருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் முன்னர் வகித்திருந்தார்.
பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சுப் பதவியை கபீர் ஹாசீம் முன்னர் வகித்திருந்தார்.
பதில் அமைச்சர்கள் மூவரும் இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர். 
Charles Ariyakumar Jaseeharan

Post a Comment

0 Comments