Ticker

6/recent/ticker-posts

மருத்துவர் ஷாபியை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை?

குருணாகலை பொது மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றிய  மருத்துவர் ஷாபி அவர்களை  மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருவதாக அறிய வருகிறது.

இதற்கான பரிந்துரைகளை வழங்கு மாறு அரச சேவைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள தாய்மார்களை திட்டமிட்டு கருத்தடை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஷாபியின்  சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

குருணாகலை   நீதிமன்றத்தில்  இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது, இந்த வழக்கில்  மருத்துவர் ஷாபி  சந்தேக நபராக பெயர் குறிக்கப்பட்டுள்ளார்.

மருத்தவர் ஷாபியின் வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்ற அறிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் ஷாபி மருத்துவரை மீண்டும் நியமிப்பது குறித்து பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments