ஈரானிய இராணுவம் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில் உக்ரேனிய விமானம் விழ்ந்ததாக ஈரான் ஏற்றக்கொண்டுள்ளது.
176 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த உக்ரேனிய விமானம் விழுந்து நொருங்கியதால் அதில் பயணித்த அனைவரும் மரணத்தை தழுவினர். பல நாட்கள் கடந்த நிலையில் ஈரானிய அதிகாரிகள் தமது தவறை ஏற்றுக்கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இந்த விபத்து மனித தவறின் காரணமாக இடம்பெற்றிருப்பதாக தற்போது ஈரான் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களிலேயே இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்ப்பட்டது.
ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக இந்த விமான விபத்து ஏற்பட்டதாக உளவுத்துறை கூற்றுக்களை அதாரமாக வைத்து அமெரிக்காவும் கனடாவும் கூறிவந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக அந்தக் கூற்றை ஈரான் மறுத்து வந்தது.

0 Comments