அஸர்பைஜானில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இலங்கை மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளன.
மூன்று மாணவிகள் தங்கியிருந்த அஜர்பைஜானின் பாகுவின் புறநகரில் உள்ள இரண்டு மாடி வீட்டின் அடித்தளத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரும் உயிரிழந்திருப்பதாக அறிய வருகிறது.
தீ காரணமாக ஏற்பட்ட புகையை சுவாசித்ததன் விளைவாக மூன்று மாணவர்களும் இறந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தவறான மின்சுற்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூன்று இலங்கை மாணவிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அஜர்பைஜானில் உள்ள வெஸ்ட் கஸ்பியன் தனியார் பல்கலைக்கழகத்தில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு விடுதி வசதி இல்லாததால், வேறு தனியார் இடங்களில் தங்குமிடத்தை அமைத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவித்திருந்தது. அதன்காரணமாக அடிப்படை வசதிகள் குறைந்த இடங்களில் இம்மாணவிகள் தங்கியிருந்ததாகவும் அறிய வருகிறது.
எவ்வாறாயினும், அஸர்பைஜானில் இராஜதந்திரத்திற்கான இலங்கை தூதரக சேவை எதுவும் இல்லாததால், வெஸ்ட் கஸ்பியன் பல்கலைக்கழகம் துபாயில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

0 Comments