சிலாபம் மருத்துவமனையில் நேற்று (11) அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி உட்பட கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 20 நோயாளிகள் தற்போது மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 15 மருத்துவமனைகளில் 6 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இடம் பெற்று வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்த தம்பதியினர் நேற்று (11) வைரஸ் தொற்றின் பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஒரு வழிகாட்டியுடன் காரில் வந்திருந்தனர், வழிகாட்டி அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார்..
இதற்கிடையில், கொரோனா (கோவிட் 19) நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு ஐடீஎச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இத்தாலியில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் 53 வயதான இந்தப் பெண் சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார். இவர் ஆண்டிகம - செருகெலே பகுதியில் வசிப்பவர் என்று அறிய வந்துள்ளது.
குறித்த பெண்மணிக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்தப்படுத்துவதற்காக அவரை ஐடிஎச் மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

0 Comments