2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படுகிறது.
மாவட்ட செயலகங்களூடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 Comments