Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு 40 மடங்காக அதிகரித்திருக்கிறது

இங்கிலாந்தில் சுமார் 10,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனடிப்படையில் கொரோனா வைரஸ் நோய் அதிக ஆபத்துள்ள தொற்றுநோய்களில் ஒன்றாக இங்கிலாந்து அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் பரவல்  "இந்த சகாப்தத்தின் மிக மோசமான பொது சுகாதார நெருக்கடி" என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிரிட்டனில் இன்று பத்து கொரோனா வைரஸ் இறப்புகள் நிகழ்ந்துள்ளன, கிட்டத்தட்ட 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட  40 மடங்கு அதிகமாக பரவியுள்ளது.

இருமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments