Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 85 ஆக உயர்வு

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. 

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. கேரளா, டெல்லி, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாடசாலைகளுக்கு, கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments