Ticker

6/recent/ticker-posts

கொரோனா கோரத்தாண்டவம் : இத்தாலியில் 6820 இறப்புகள் - ஸ்பெய்னில் 3434 இறப்புகள் - உலகளவில் 19,625 இறப்புகள்

உலகளவில், கொரோனா வைரஸ் (COVID-19) நோய்த்தொற்று காரணமாக இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 19625 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை  6820 பேர் இத்தாலியில் இறந்தள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு மூலக்காரணம் என்று கருதப்பட்ட சீனாவில்  இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக  இன்று ஸ்பெயினில் பதிவாகியுள்ளது.

சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3163 ஆகவும், ஸ்பெயினில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3434 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2077 ஆகும்.

பிரான்சில்  இறந்தவர்களின் எண்ணிக்கை 1,300 என மதிப்பிடப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் 428,405 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள்  பதிவாகியுள்ளனர்..

Post a Comment

0 Comments