Ticker

6/recent/ticker-posts

மேலும் நான்கு கொரோனா நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்

இலங்கையில் மேலும் நான்கு கோவிட் -19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில்  கோவிட் -19 தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கோவிட் பத்தொன்பது வைரஸ் தொற்று காரணமாக ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபர் தீவிர கண்காணிப்புப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிட் பத்தொன்பது நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் 255 நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments