Ticker

6/recent/ticker-posts

கொரோனா அறிகுறி : போலந்து சுற்றுலாப்பயணிகள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதி

போலந்தில் இருந்து இலங்கை வந்த   சுற்றுலாப்பயணிகள் நால்வர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் இருந்து மீண்டும் தமது நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை தொடர்ந்து இவர்கள் ஐடீஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments