Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் பாதிப்பு: தன்னையே தனிமைப்படுத்திய ருமேனிய பிரதமர் லுடோவிக்

ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் லுடோவிக் ஓர்பான் கலந்துகொண்டார். அப்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி. ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த எம்.பி. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கும் கோவிட்-19 பாதிப்பு இருக்கலாம் என்பதால் தன்னைத்தானே தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கிறார் ஓர்பான்.
இதுகுறித்து பிரதமர் ஓர்பன் கூறும்போது, “நான் நேற்று நடைபெற்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது எம்.பி. ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் என்னை நானே சுய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கிக் கொண்டுள்ளேன். இருந்தபோதும் பிரதமர் பணியை எனது அறையிலிருந்தே நான் தொடர்கிறேன்” என்றார். இத்தகவலை அரசு செய்தித்தொடர்பாளர் லோனெல் டொங்கா தெரிவித்தார். 

Post a Comment

0 Comments